செய்திகள்

யாழ்ப்பாணம்- உடுவில் கிழக்கு அருள்மிகு கற்பகப் பிள்ளையார் திருக்கோயில்…  

யாழ்ப்பாணம்- உடுவில் கிழக்கு அருள்மிகு கற்பகப் பிள்ளையார் திருக்கோயில் 
கேட்கும் வரமளிக்கும் எங்கள் கற்பகப் பிள்ளையாரே
நாம் கேட்கும் வரத்தைத் தந்தருள வேண்டுமய்யா
வாழ நல்ல வழி வேண்டும், நல்லபடி வாழவேண்டும் 
துன்பங்கள் அண்டாத திடமான வாழ்வு வேண்டும் 
நோய் நொடி அண்டாத நிரந்தர வாழ்வு வேண்டும் 
மனச் சோர்வு நம்மை நாடாதிருக்க வேண்டும் 
போட்டி, பொறாமைகள் இல்லாத மனம் வேண்டும் 
தளராத மனவுறுதி தவறாமல் கிட்ட வேண்டும் 
உற்றவரும், சுற்றவரும் மகிழ்ந்து உறவாட வேண்டும் 
ஊரும் நம் நாடும் உயர்வு பெற்று நிற்க வேண்டும் 
நாட்டினிலே நல்லாட்சி நின்று நிலைக்க வேண்டும் 
அநியாயம் செய்வோர்கள் அடியோடு அழிய வேண்டும் 
குற்றங்கள் இல்லாத மேன்மை நிலை இருக்க வேண்டும் 
கல்விச் செல்வம் யாவர்க்கும் சமமாய் கிட்ட வேண்டும் 
நல்லவர்கள் நாட்டில் மதிப்படைய வேண்டும் 
ஆணவம் கொண்டோர் அடிசாய வேண்டும் 
ஒழுக்கமும், நேர்மையும் உறுதிபட வேண்டும் 
அச்சமில்லா நிம்மதியை நாமடைய வேண்டும் 
அரண்டு, அஞ்சும் நிலை அடியோடு அகல வேண்டும் 
பஞ்சம், பசி, பட்டினி இல்லாதொழிய வேண்டும் 
இத்தனையும் தந்து எமை வாழ வைப்பாய்
உடுவில் தமிழ் மண்ணில் கோயில் கொண்ட பிள்ளையாரே
எங்கள் குலம் காத்தருளும் இறைவா கற்பகப் பிள்ளையாரே
உன்னருளாலே நாம் மேன்மையுற வேண்டும் ஐயா.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button