செய்திகள்

யாழ்ப்பாணம்- காரைநகர் அருள்மிகு ஈழத்து சிதம்பரம் திருக்கோயில்…

 
அன்னை சௌந்தராம்பிகை அருகு கொண்டவனே சிவனே
அன்புகொண்ட சுற்றம் சூழ வாழ வழி தருவாய்
நெஞ்சமதில் நிம்மதியை உறுதி செய்ய வேண்டும் 
நீயெமக்கு அரணாக இருந்திடுவாய் ஐயா
ஈழத்து சிதம்பரத்தில் அமர்ந்தவனே சிவனே
என்றும் எமக்காறுதலை நித்தமுமே தருவாய்
ஊற்றெடுக்கும் உன் கருணை எமையடைய வேண்டும்
நீயெமக்கு காவலாய் இருந்திடுவாய் ஐயா
காரைநகர் நற்பதியில் கோயில் கொண்டவனே சிவனே
வளங்கொண்ட பெருவாழ்வைத் தயங்காமல் தருவாய்
கருணைமிகு உன்னருளால் நலமடைய வேண்டும் 
நீயெமக்குத் துணையாக இருந்திடுவாய் ஐயா
கடல் சூழ்ந்த தீவதனில் உறைபவனே சிவனே
கவலையற்ற மகிழ்வான வாழ்க்கையைத் தருவாய்
பெருமை கொண்ட உன்நாமம் மனதிருக்க வேண்டும் 
நீயெமக்கு நல்மதியாய் இருந்திடுவாய் ஐயா
ஐயனார் திருக்கோயில் அருகு கொண்ட சிவனே
நிம்மதியாய் நாம்வாழ வழியமைத்துத் தருவாய்
மேன்மைமிகு நல்வாழ்வை நாமடைய வேண்டும் 
நீயெமக்கு உறுதுணைய் இருந்திடுவாய் ஐயா
உயர்ந்த பெருங் கோபுரத்தை உடையவனே சிவனே
ஒன்றுபட்டு உயர்வுபெற வழியமைத்துத் தருவாய்
தனித்துவம் பேணி நாம் தலைநிமிர வேண்டும் 
தயாளனே நீயெமக்கு முன்னே இருந்திடுவாய் ஐயா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button
image download