செய்திகள்

யாழ்ப்பாணம்- கைதடி அருள்மிகு வீரகத்தி விநாயகர் திருக்கோயில்…

கைதடியில் கோயில் கொண்ட வீரகத்தி விநாயகரே
நெஞ்சில் நிறைந்தவரே எமக்கருள வந்திடய்யா
திருக்கோயில் வீற்றிருந்து திருக்காட்சி தருபவரே
வளமுடனே நாமிருக்க உன்கருணை வேண்டுமய்யா
தடைகள் தகர்த்தெறியும் வல்ல விநாயகரே
தடைதாண்டி உயர்வு பெறவுன் துணையே வேண்டுமய்யா
ஏங்கித் தவிக்கும் மக்கள் ஏக்கம் போக்கிவிட
நிம்மதி நிலைத்துவிட நீயே துணையய்யா
வளங் கொண்ட நன்னிலத்தில் வீற்றிருக்கும் விநாயகரே
வாழ்த்தி வழிநடத்தி வளப்படுத்த வந்திடய்யா
நம்பித் தொழும் அடியவர்க்கு நம்பிக்கை தந்துவிட
நாயகனே, பேரருளே அருள் வழங்கி விட்டிடய்யா
தரணிக்கு அருள் பொழியும் தயாளனே விநாயகரே
தலை நிமிர்ந்து நாம் வாழ வழியைநீ செய்திடய்யா
சங்கடங்கள் வரும் வேளை தடுத்து நிறுத்திவிட
சங்கரனின் திருமகனே காவலாய் இருந்திடய்யா
வேழமுகங் கொண்ட வினை தீர்க்கும் விநாயகரே
வெற்றிகள் அடைந்து நாம் உயர்ந்துவிட வேண்டுமய்யா
வேதனைகள் அண்டாத வாழ்வை நாம் பெற்றுவிட
விக்னவிநாயகனே காத்து அருளிடய்யா
ஆற்றல் தந்து ஆறுதலை அளிக்கின்ற விநாயகரே
அச்சமற்ற நிம்மதிக்கு உன்னருளே வேண்டுமய்யா
உற்ற துணையாயிருந்து உயர்வு நிலை பேணிடவே
கைதடியில் அமர்ந்தவனே அருள் பொழிய வேண்டுமய்யா.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button