செய்திகள்

யாழ்ப்பாணம்- கொக்குவில்- நந்தாவில் அருள்மிகு அம்மன் திருக்கோயில் …

அருள் வழங்கி நலமருள வீற்றிருக்கும் தாயே
அன்பு கொண்ட உன்கருணை தரவேண்டும் அம்மா 
தாயாக இருந்தெம்மை வழிநடத்தும் அன்னை 
உன் திருப்பாதம் பணிகின்றோம் எழுந்துவா அம்மா 
தமிழ் ஒலிக்கும் யாழ்ப்பாணப் பெருநிலத்தில் கோயில் கொண்ட தாயே
தரணியிலே தலைதாழா நிலையெமக்கு வேண்டும் அம்மா 
வாழ்விலே துணையிருந்து வழிநடத்தும் அன்னை 
உன்திருநாமம் போற்றுகின்றோம் எழுந்துவா அம்மா 
வளம் பொங்கும் கொக்குவிலில் அமர்ந்தருளும் தாயே
வரும் துன்பம் யாவையுமே தடுத்தருள வேண்டும் அம்மா
காவலாயிருந் தெம்மை அரவணைக்கும் அன்னை 
உன் அருளை நாடுகின்றோம் எழுந்துவா அம்மா
நந்தாவில் குளமருகில் இருந்தருளும் தாயே
நத்திவரும் வேதனைகள் தடுத்தருள வேண்டும் அம்மா 
நாடிவரும் அடியவர்க்கு அருளளிக்கும் அன்னை 
உன்வரவை நாடுகின்றோம் எழுந்துவா அம்மா 
அழகுமிகு திருக்கோயில் உடையவளே தாயே
அரவணைத்து, காத்து, ஆறுதலைத் தரவேண்டும் அம்மா 
தேடிவரும் பக்தர்களுக்கு வழிகாட்டும் அன்னை 
உன் கருணை நாடுகின்றோம் எழுந்துவா அம்மா 
நம்பிவரும் மக்களுக்கு நலம் வழங்கும் தாயே
நாட்டில் நாம் உரிமையுடன் வாழவேண்டும் அம்மா 
துணிவு கொண்டு முன்செல்ல வழிகாட்டும் அன்னை 
உன் காவல் கோருகின்றோம் எழுந்துவா அம்மா.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen