செய்திகள்

யாழ்ப்பாணம்- கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் திருக்கோயில்..

மஞ்சவனப் பதியமர்ந்த மாமணியே
தஞ்சமென்றுன்னடியே சரணடைந்தோம்
வஞ்சமனக் கொடுமைகளைக் களைந்தெறிய
நெஞ்சம் நிறை உன்னருளே வேண்டுமய்யா
குஞ்சரத்தின் முகம் கொண்டோன் இளையவனே
அஞ்ச வரும் தீமைகளை அகற்றிடுவாய்
மிஞ்சவரும் உன்னருளால் வேலவனே
நெஞ்சமதில் நிம்மதியை நிறைத்திடய்யா
வாஞ்சையுடன் உன்னடியைப் போற்றுகின்றோம்
சஞ்சலங்கள் போக்கிட நீ வந்திடுவாய்
வெஞ்சமரின் கொடுமைகளை அழித்தொழித்து 
நெஞ்சமதில் அமைதியையே இருத்திடய்யா
கொக்குவிலில் குடி கொண்ட கோமகனே
திக்கெங்கும் உன்னருளைப் பரப்பிடுவாய்
நெக்குருகி உன்னடியைப் பணிந்து நிற்கும்
நெஞ்சங்களில் கருணை மழை பொழிந்திடய்யா
தெய்வயானைத் திருமகளை மணந்தவனே
மெய்யடியார் துயர் போக்க வந்திடுவாய்
உய்ய வழி உன் வழியே என்று நம்பும் 
உள்ளங்களில் கோயில் கொண்டு அருளிடய்யா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர், அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button