செய்திகள்

யாழ்ப்பாணம்- சங்கரத்தை அருள்மிகு பத்திரகாளி அம்மன் திருக்கோவில்..

ஜனனி, ஜனனி, ஸ்ரீஜனனி
ஜகமதைக்காத்து அருளிடும் நீ
துன்பங்கள் போக்கி துயரங்கள் நீக்கி
மங்களம் பொங்க அருள் தருவாய்
நாயகியேயுனைச் சரணடைந்தோம்
நல்லருள் பெருக துணையிருப்பாய்
போர்க்குணம் போக்கி, புன்மைகள் நீக்கி
பாரெங்கும் அமைதியைப் பரப்பிடுவாய்
நாம்படும் துன்பங்கள் துடைத்தெறிவாய்
நாயகியே எம்மைக் காத்திடுவாய்
ஏற்றிப்போற்றி வாழ்த்துகிறோம்
ஏனோ நீயும் இரங்கவில்லை
துவண்டு, துடித்து நாம் இருந்திடவா தூயவளே நீ எண்ணிவிட்டாய்
நாளை நடப்பதை நாமறியோம்
நல்லவளே எமைக் காத்திடம்மா
போதிய துன்பம் அடைந்து விட்டோம் பூமகளே மனம் இரங்கிடம்மா
சங்கரத்தையில் குடிகொண்டவளே
சரணடைந்தோம் எமைக்காத்திடம்மா.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button