...
செய்திகள்

யாழ்ப்பாணம்- சண்டிலிப்பாய் அருள்மிகு சீரணி நாகபூசணி அம்மன் திருக்கோயில் 

சீரான வாழ்வளித்து சிறப்பளிக்கும் தாயே நாகபூசணி 
தளராத மனவுறுதி தந்தெமக்கு அருளிடம்மா 
நிலையான நிம்மதியை நாம் பெற்று வாழ்வதற்கு 
உறுதுணையாயிருந் தெமக்கு ஆறுதலைத் தந்திடம்மா
அற்புதங்கள் பல காட்டி அருள் பொழியும் தாயே நாகபூசணி
அரவணைத்துக் காத்தெமக்குத் துணையாக விருந்திடம்மா
மகிழ்வு நிறை பெருவாழ்வை நாம் பெற்று வாழ்வதற்கு
துணையிருந்தெம்மை யென்றும் அணைத்தருள வேண்டுமம்மா
யாழ்ப்பாணத் திருநாட்டில் கோயில் கொண்ட தாயே நாகபூசணி 
வாழ்விடத்தில் நிம்மதியாய், நிரந்தரமாய் வாழ வழி செய்திடம்மா
தாழ்வில்லாவுயர் நிலையை நாம் பெற்று வாழ்வதற்கு 
தடைகளைத் தகர்த்தெம்மைக் காத்தருள வேண்டுமம்மா
சண்டிலிப்பாய் தமிழ் மண்ணில் நமக்கருள அமர்ந்த தாயே நாகபூசணி
சத்தியம் தவறாத நல்வழியில் வாழ எமக்கருளிடம்மா
உறவுகள் பலப்பட்டு உயர்வு பெற்று வாழ்வதற்கு
உறுதுணையாயிருந் தெமக்கு மதியருள வேண்டுமம்மா
நாடிவந்து பணிந்திடுவோர் குறைதீர்க்கும் தாயே நாகபூசணி
நலமுடனே நாம் வாழ ஏற்ற துணை இருந்திடம்மா
நிம்மதிக்குப் பங்கமின்றி இன்பமுடன் வாழ்வதற்கு 
நற்றுணையாயிருந் தெம்மை வழி நடத்த வேண்டுமம்மா
சீரணி நாகபூசணி யென்ற பெயர் கொண்ட தாயே நாகபூசணி
உலகத் தமிழர் இதயங்களிலிருந்து அருளிடம்மா
வாழ்வினிலே எழுச்சியும் நிம்மதியும் நிலைப்பதற்கு
ஏற்ற அருள்தந்து எமக்குத்துணை தந்திடம்மா.
ஆக்கம்- த மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen