செய்திகள்

யாழ்ப்பாணம்- சுன்னாகம் அருள்மிகு சந்திரசேகரப் பிள்ளையார் திருக்கோயில் 

சுன்னாகம் நன்நகரில் கோயில் கொண்ட பெருமானே
சுற்றமும், சூழலும் சீர்பெற்று நிலைத்திடவே
ஏற்ற வழியமைத்து என்றும் துணையிருக்க வேண்டுமய்யா
வினைபோக்கி நலமளிக்கும்
சந்திரசேகரப் பிள்ளையாரே
தமிழ் முழங்கும் வளநகரில் தனித்துவமாய் வீற்றிருக்கும் பெருமானே
தக்கவழி காட்டி நாம் தளர்வின்றி வாழ்ந்துவிட
உற்ற துணையாயென்றும் இருந்தருள வேண்டுமய்யா
ஐந்து கரங் கொண்டு அணைத்தருளும் சந்திரசேகரப் பிள்ளையாரே
யாழ்ப்பாணப் பெருநிலத்தில் மாண்புடனே வீற்றிருக்கும் பெருமானே
நலந்தந்து, உயர்வளித்து நம்வாழ்வு மேன்மையுற
உரியவழி காட்டியென்றும் துணையிருக்க வேண்டுமய்யா
சங்கரனார் மூத்தவனே சந்திரசேகரப் பிள்ளையாரே
தாய், தந்தை பெரியரென்று தரணிக்கு சொன்னவரே பெருமானே
தரணியிலே தமிழ் மொழியும் நம்மவரும் சீர் பெற்று மிளிர்ந்திடவே
ஏற்புடைய வழியமைத்து அருள் செய்ய வேண்டுமய்யா
உலகாளும் திருமகனே எங்கள் சந்திரசேகரப் பிள்ளையாரே
கேட்டவரம் தடையின்றிக் கொடுத்தருளும் பெருமானே
தொல்லையில்லா நிம்மதியை நாம் பெற்று வாழ்ந்திடவே
பங்கமில்லா முறைமையினைத் தான் வழங்க வேண்டுமய்யா
நம்பிக்கை தந்தருளும் சந்திரசேகரப் பிள்ளையாரே
மஞ்சளிலும், சாணத்திலும் வந்தமரும் பெருமானே
நன்றி கொண்ட மனிதர்களாய் நம்மவர்கள் உயர்வுபெற
என்றும் துணையிருந்து வழிநடத்த வேண்டுமய்யா
சுன்னாகம் நகரமர்ந்த சந்திரசேகரப் பிள்ளையாரே
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen