...
செய்திகள்

யாழ்ப்பாணம்- தென்மராட்சி கல்வயல் பெருங்குளம் அருள்மிகு பிள்ளையார் திருக்கோயில் 

தென்மராட்சி வளநிலத்தில் வந்தமர்ந்த பிள்ளையாரே
தெளிவான வழிகாட்டியெமக்கு வாழ வழி தருவாய்
வளம் நிறைந்த தமிழ் மண்ணில் இருந்தெமக்கு வாழ்வளித்து 
உறுதுணையாய் நீயிருந்து காத்தருள்வாய் பெருங்குளத்துப் பிள்ளையாரே
அழகுமிகு கல்வயவில் அழகுறவே வீற்றிருந்து 
ஆனந்தமாய் நாம் வாழ உடனிருந்து வலுவூட்டி
நம்வாழ்வு நலம் பெறவேயென்றும் துணையிருந்து 
எம்முள்ளத்தில் உறைந்திருந்து உயிரளிப்பாய் பெருங்குளத்துப் பிள்ளையாரே
எங்கும் நன்மை நிலைத்துவிட அருள் வழங்கும் பெருமானே 
நாடி நிற்கும் எங்களுக்கு துணையிருந்து அருள் தருவாய்
பார்வதியையுடன் கொண்டு அருள் பரப்பும் சிவன் மகனே
எங்கள் நலன் காத்தெமக்கு துணையிருப்பாய் பெருங்குளத்துப் பிள்ளையாரே
பழம் பெருமை கொண்ட யாழ்ப்பாணத் தமிழ் நாட்டிலுறையும் நாயகனே
அணைத்தருள்வாய் உலகினையே, ஆட்கொள்வாய் எங்களையே
நாற்புறமும் நல்லறிவை துலங்கச் செய்தெமக்கு
மகிழ்வு நிறை வாழ்வை உரித்துடையதாக்கிடுவாய் பெருங்குளத்துப் பிள்ளையாரே
எழில் நிறைந்த வயல் நிலத்தை முப்புறமும் கொண்டமர்ந்த விநாயகரே
எப்பொழுதுமுடனிருந்து எமக்கு ஆறுதல் தருவாய்
நன்மை யெங்கும் நிறைந்து விட நலம் பெற்று நாம் வாழ 
உன்னைச் சரணடைந்தோம் பெருங்குளத்துப் பிள்ளையாரே
வனப்புமிகு திருக்கேணியருகில் அமர் கணபதியே
நம்பிக்கை தந்தெமக்கு நாயகனே உடனிருப்பாய்
நீயே எம்காப்பு என்று நம்பும் எங்களுக்கு 
வாழும் வழி காட்டி நிம்மதியை நிலை பெறச் செய் பெருங்குளத்துப் பிள்ளையாரே.
ஆக்கம்- த மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen