...
செய்திகள்

யாழ்ப்பாணம்- தெல்லிப்பளை அருள்மிகு துர்க்கையம்மன் திருக்கோயில் …

தெல்லிப்பளை திருவிடத்தில் கோயில் கொண்டவளே துர்க்கையம்மா
தெளிவான வழிகாட்டி நல்வாழ்வைத் தந்திடம்மா
திசையறியா நிலை போக்கி மேன்மை நிலை நாம் பெறவே
அருள் தருவாய், காத்தருள்வாய் நீயே துணையம்மா 
தமிழொலிக்கும் யாழ் நாட்டின் ஒளிவிளக்காய் அமர்ந்தவளே
தடுமாற்றமில்லாத மனவுறுதி தந்திடம்மா
அச்ச நிலை, அவதி நிலை அண்டாத எதிர்காலம் பெற்றிடவே
ஆதரிப்பாய், உடனிருப்பாய் நீயே அருளிடம்மா
அதர்மத்தை அழித்தொழிக்க ஆற்றலுடன் வந்தவளே
ஆறுதல் தந்தெம்மை நிலைப்படுத்த வேண்டுமம்மா
நம்பிவரும் எம்பயணம் நலமாக அமைந்திடவே
நலமளித்து உதவி செய்ய நீயே வழிகாட்டிடம்மா
தலவிருட்சம் இலுப்பையைத் தனதாகக் கொண்டவளே
இன்பம் நிறை வாழ்வு பெற உறுதுணையாயிருந்திடம்மா
வஞ்சனையும், சூழ்ச்சியும், வலிய கொடுநோய்களுமே அண்டாதிருந்திடவே
அரவணைத்து காத்தெம்மை ஆதரிக்க வந்திடம்மா
துர்க்கா புஸ்கரணி அருகு கொண்டு அமர்ந்தவளே
துயரமில்லா நல்வாழ்வு தந்தருள வேண்டுமம்மா
தமிழ் மொழியும், நம்மினமும் வளம் பெற்று நிலைபெறவே
தயங்காமல் உடனிருந்து காவல் செய்ய வந்திடம்மா
ஆவணியில் தேரில் வந்து அருளளிக்கும் தேவியம்மா
உற்றவரும், ஊரவரும் ஒன்றுபட வேண்டுமம்மா
உறவுக்குப் பங்கமில்லா ஒற்றுமையையே நாம் அடைந்திடவே
உலகாளும் தாயவளே உடன் வந்து அருளிடம்மா.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen