அழகு மயில் ஏறிவந்து உலகளந்த பெருமானே
அருட்கவியால் உனைப் பாடித்தொழுகின்றேன் கேட்டிடைய்யா
கேட்கும் வரம் தந்தெமக்கு ஆறுதலைத் தாருமைய்யா
நாரந்தனை கோயில் கொண்ட சிவசுப்பிரமணியப் பெருமானே
வள்ளி தெய்வானையருடன் வீற்றருளும் பெருமானே
வருங்காலம் நலம் பெறவே உனைப்பாடித் தொழுகின்றேன்
நல்ல வழி காட்டியெமக்கு ஆதரவைத் தாருமைய்யா
நாரந்தனை கோயில் கொண்ட சிவசுப்பிரமணியப் பெருமானே
விநாயகனுக்கு இளையோனாய் அவதரித்த பெருமானே
வெற்றிபெற்று வாழ்வதற்கு உனைப்பாடித் தொழுகின்றேன்
தயக்கமின்றி முன் செல்ல நல்வழியைத் தாருமைய்யா
நாரந்தனை கோயில் கொண்ட சிவசுப்பிரமணியப் பெருமானே
தீவகத்தில் குடியிருந்து திசையாளும் பெருமானே
திகட்டாத நல்வாழ்வைக் கோரி உனைப்பாடித் தொழுகின்றேன்
தொல்லையில்லா வள வாழ்வை எமக்கு நீ தாருமைய்யா
நாரந்தனை கோயில் கொண்ட சிவசுப்பிரமணியப் பெருமானே
சீர்மைமிகு சரவணையூர் எழுந்தருளும் பெருமானே
செழுமை மிகு நற்குணங்கள் பெற்றிடவே உனைப் பாடித் தொழுகின்றேன்
சோர்வின்றி எழுச்சியுடன் வாழ வழி தாருமைய்யா
நாரந்தனை கோயில் கொண்ட சிவசுப்பிரமணியப் பெருமானே
செந்தமிழை வாழ வைத்து சீரமைக்கும் பெருமானே
செந்தழல் போல் ஒளிபரப்பி அருளளிக்க உனைப்பாடித் தொழுகின்றேன்
நொந்து மனம் சோராமல் தலை நிமிர்ந்து வாழும் வழி தாருமைய்யா
நாரந்தனை கோயில் கொண்ட சிவசுப்பிரமணியப் பெருமானே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.