...
செய்திகள்

யாழ்ப்பாணம்- நீர்வேலி- அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில்

 
தஞ்சமென்று வருவோர்க்கு காப்பருளும் சண்முகனே
தீராத துன்பங்களைத் தீர்த்தெமக்கு அருளிடையா
நீர்வேலி நன்னிலத்தில் கோயில் கொண்ட மாமணியே
மேன்மையுடன் இவ்வுலகில் நாம் வாழ அருளிடைய்யா
வஞ்சமனக் கொடுமைகளை அழித்தருளும் சண்முகனே
நெஞ்சம் நிறையுன்னருளை எமக்கு நீ அருளிடையா
யாழ்ப்பாணப் பெருநிலத்தில் இருந்தருளும் மாமணியே
மகிழ்ச்சி பொங்க வாழவென்றும் வழியமைத்து அருளிடைய்யா 
சூரபத்மன் ஆணவத்தையடக்கியருள் செய்தவனே சண்முகனே
சூழ்நிலைகள் நல்லவையாயிருக்க எமக்கு நீ அருளிடையா
திமிர்கொண்டு செயற்படுவோர் கொட்டமதையடக்கிவிடும் மாமணியே 
தீராத நோய்களெம்மை அண்டாது அருளிடைய்யா 
 தமிழ்த் தெய்வமாயிருந்து தரணியையே ஆளுகின்ற சண்முகனே
சூழவரும் தீயபகை கொடுமைகளைத் தடுத்து அருளிடைய்யா 
வெற்றிவேல் முருகனென்று பெயர் கொண்ட மாமணியே 
விரைந்து வந்து எமக்குத் துணையிருந்து அருளிடைய்யா 
சங்கிலியன் ஆண்ட தமிழ் மண்ணில் ஆட்சி செய்யும் சண்முகனே
வருங்காலம் சிறப்படைய நாம் வாழ அருளிடைய்யா 
திருவேலைக் கரந்தாங்கி அருளுகின்ற மாமணியே 
உடனிருக்கும் அன்னையரின் அருளினையுமெமக்கு நீ அருளிடைய்யா 
உயர்ந்த பெருங் கோபுரத்தையுடையவனே சண்முகனே
உற்றவரும், ஊரவரும் ஒன்றுபட அருளிடைய்யா 
சஞ்சலங்கள் போக்கிவிடும் வேலவனே மாமணியே 
என்றும் உடனிருந்து எமைக்காத்து அருளிடைய்யா. 
ஆக்கம்- த மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen