...
செய்திகள்

யாழ்ப்பாணம்- பன்னாலை- வரத்தலம்- அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் ..

எங்கும் நிறைந்திருந்து உலகாளும் விநாயகனே
எங்கள் குலம் வாழ உறுதுணையாய் இருந்திடய்யா
என்றும் உன்துணையை இரஞ்சித் தொழுகின்றோம்
எப்பொழுதும் எமக்குத் துணையிருக்க வேண்டுமய்யா
பன்னாலை நன்னிலத்தில் வீற்றிருக்கும் விநாயகனே
பார்வையினை எம்மீது செலுத்தி இருந்திடய்யா
பார்போற்ற நாம் வாழ விதியமைக்கக் கோருகின்றோம்
எப்போதும் எமக்கு நீ வழி காட்ட வேண்டுமய்யா
யாழ்ப்பாண நம் நிலத்தில் வீற்றிருக்கும் விநாயகனே
பாழ்பட்டுப் போகாமல் வாழவழி காட்டிடய்யா
துரத்திவரும் துன்பங்களை தடுத்திடவே வேண்டுகின்றோம்
எப்போதும் உற்ற துணையாயிருந்து காப்பை நீ தந்திடய்யா
வரமருளவென்று வரத்தலத்தில் அமர்ந்துள்ள விநாயகனே
வல்லமை தந்தெம்மை வாழவழி செய்திடய்யா
கரவு கொண்ட மனத்தினரின் உறவுத் தடை கோருகின்றோம்
எப்போதும் தப்பாமல் அவ்வுதவி செய்திடய்யா
கற்பக விநாயகரென்ற திருநாமம் கொண்டவரே விநாயகனே
அற்புதங்கள் செய்து நம் மண்ணைக் காத்திடய்யா
எதிர்கால நம்வாழ்வு இனிதாக்க விரும்புகின்றோம்
எப்போதும் அந்நிலையை எமக்காக்கித் தந்திடய்யா
மருதநிலச் சூழலிலே நிலை கொண்ட விநாயகனே
உற்றவரும், ஊரவரும் இணைந்திருக்கச் செய்திடய்யா
நற்கருணை கொண்டவுன்னை மனமுருகித் தொழுகின்றோம்
நம்வாழ்வு மேன்மையுற ஏற்ற அருள் தந்திடய்யா.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen