...
செய்திகள்

யாழ்ப்பாணம்- பொன்னாலை அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில்

பொன்னாலை வீற்றிருக்கும் பேரருளே பெருமாளே
பொல்லாதோர் கொடுமைகளை அழித்திடவே வா
துன்பங்கள் பலநூறு துரத்தி வரும் போது 
துணையாக விருந்தெம்மைக் காப்பது உந்தன் திருவேலை
காக்கின்ற கடமை கொண்ட பேரருளே பெருமாளே
காவலாயிருந் தெம்மைக் காத்திடவே வா
நம்பியுந்தன் அடிபணிந்து சரணடைந்தோம் நாங்கள் 
நற்றுணையைத் தந்தெம்மைக் காப்பது உந்தன் திருவேலை
அன்னை மகாலட்சுமியை அருகு கொண்ட பேரருளே பெருமாளே
தாயவளின்  கருணையையும் பெற்றெமக்குத் தா
உள நோயும், உடல் நோயும் அண்டாத நிலைதந்து
தயங்காமல் காத்தருளல் உந்தன் திருவேலை
தொல்லை தரும் கொடியவரை அழிக்க அவதரிக்கும் பேரருளே பெருமாளே
தோல்வியில்லா பெருவாழ்வை உறுதி செய்துதா
நேர்மையுடன் வாழ உன் துணையைத் தந்து 
நிம்மதியாய் வாழச் செய்தல் உந்தன் திருவேலை
சக்கரத்தை தாங்கி நின்று அருளுகின்ற பேரருளே பெருமாளே
சத்தியத்தைக் காத்திடவே எழுந்து நீ வா
சங்கரனார் மைத்துனனே ஆறுதலைத் தந்து
நித்தமும் எம் உள்ளம் உறைந்திருத்தல் உந்தன் திருவேலை
உயர்ந்த பெருங் கோபுரத்தை உடையவரே பேரருளே பெருமாளே
எம்முரிமை மீட்டெடுக்க உடனிருக்க வா
மனமுருகியுன் அருளைக் கேட்கின்றேன் திருமாலே
எம்வாழ்வு உயர்வு பெற துணையிருந்து அருளிடவே வந்திடய்யா.
ஆக்கம்- த மனோகரன். 
துணைத் தலைவர், அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen