செய்திகள்

யாழ்ப்பாணம்- பொன்னாலை வரதராஜப் பெருமாள் திருக்கோயில்

 
பொன்னாலை கோயில் கொண்ட பெருமாளே
பொல்லாதார் தரும் துன்பம் போக்கிடவே வா
துன்பங்கள் பலகோடி துரத்திவரும் வேளை
துணையாக இருந்து காப்பதன்றோ உனது திருவேலை
தூக்கத்தில் இருந்துவிட்டால் தூயவனே நீ
தொடர்ந்து வரும் துன்பங்களைப் போக்கிடுவதார்
அதர்மத்தை அழித்தொழிக்க அவதரிக்கும் நீ
அல்லோலகல்லோலப் படும் எமைக் கண்திறந்து பார்
காப்பதுவுன் கடமையென வேதங்கள் கூறிடினும்
கடமையினை மறந்து நீ துயில் கொள்ளப் போனதென்ன
துயில் கொண்டு நீயிருக்க துன்பமெம்மை வாட்டுதையா
துயிலெழுந்து வந்திடுவாய் துணையாக இருந்திடுவாய்
பிள்ளைகள் எங்கெங்கோ பெற்றோரும் வேறெங்கோ
செத்தொழிந்து போனாலும் முகம்பார்க்க முடியாது
ஏனய்யா இந்த இழிநிலையை எமக்களித்து
நீமட்டும் துயில் கொண்டு நிம்மதியாயிருக்கின்றாய்
சக்கரத்தைக் கையிலேற்றி துரிதமாய் வா
சண்முகனின் மாமனே விரைந்தோடிவா
முக்கண்ணன் மைத்துனனே சக்தியுமை சோதரனே
எம் துயரம் போக்கிடவே விரைந்தோடி வா.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button