...
செய்திகள்

யாழ்ப்பாணம்- வடமராட்சி அருள்மிகு வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் 

யாழ்ப்பாண மாவட்டத்தில் கோயில் கொண்ட பெருமாளே 
வாழ்வுக்கு உறுதுணையாய் இருந்தெமக்கு அருள்வாயே
தாழ்ந்து நிற்கும் எம்நிலையை உயர்த்திவிட்டு பெருமாளே
ஆழ்துயிலை விட்டெழுந்து வந்தெமக்கு அருள்வாயே
வடமராட்சி திருவிடத்தில் வீற்றிருக்கும் பெருமாளே
வலிந்து வரும் துன்பங்களைத் தடுத்தெமக்கு அருள்வாயே
வல்லிபுர ஆழ்வாரென்ற நாமம் கொண்ட பெருமாளே 
வந்தெமக்கு நலமளித்து உடனிருந்து அருள்வாயே
நரகாசுரன் கொட்டமதை அடக்கியவனே பெருமாளே
நம்பிக்கை கொண்டவர்க்கு விரைந்து வந்து அருள்வாயே
தீபாவளித் திருநாளில் வேண்டுகின்றோம் பெருமாளே
தீயபகை கொடுமைகளைத் துடைத்தெமக்கு அருள்வாயே
அன்னை மகாலட்சுமியை அருகில் கொண்ட பெருமாளே
ஆதரித்து காத்தருள விரைந்து வந்து அருள்வாயே 
உயர்ந்த பெருங் கோபுரத்தை உடையவரே பெருமாளே
துயர் களைந்து கருணை வெள்ளம் பாச்சியெமக்கு அருள்வாயே
சங்கு, சக்கரம் தாங்கிநிற்கும் தயாளனே பெருமாளே
எங்கும் இன்பம் நிறைந்துவிட ஆசிதந்து அருள்வாயே 
பங்கமில்லா வாழ்வுக்கு வழியமைக்கும் பெருமாளே
ஏங்கிநிற்கும் எமக்கருள விரைந்துவந்து அருள்வாயே
தமிழ் முழங்கும் நற்பதியில் இருந்தருளும் பெருமாளே
தரணியெங்கும் மன்னுயிர்கள் வாழ்விற்கு அருள்வாயே
உன்னடியைச் சரணடைந்தால் ஏற்றமுண்டு பெருமாளே
நத்திவந்து நலம் பெருக்கி உவகைதந்து அருள்வாயே.
ஆக்கம்- த மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen