...
செய்திகள்

யாழ்ப்பாணம்- வடமராட்சி வதிரி- அருள்மிகு பூவற்கரைப் பிள்ளையார் திருக்கோயில் 

தொல்லையில்லா வாழ்வுக்குத் துணையிருக்கும் பிள்ளையாரே
எங்கள் நலன் பேண உடனிருந்து காத்திடப்பா
உன்னடியைச் சரணடைந்து உறுதுணையைப் பெற்றுவிட 
உரிமையுடன் கேட்குமெம் குரலைக் கேட்டிடப்பா
வட இலங்கை யாழ் மண்ணில் கோயில் கொண்ட பிள்ளையாரே
நிம்மதியாய் நாம் வாழ உடனிருந்து அருளிடப்பா
நேர்மையுடன் நாம் வாழ்ந்து மேன்மை நிலை பெற்றுவிட
ஏற்றவழி கேட்குமெம் குரலைக் கேட்டிடப்பா
வளங்கொண்ட வதிரி நல்லூரில் வீற்றிருக்கும் பிள்ளையாரே
வழித்துணையாயிருந் தெமக்கு நல்ல வழி காட்டிடப்பா
வேண்டும் வரமளித்து எம்வாழ்வு உயர்ந்துவிட 
நம்பிவந்துன்னை நாடுமெம் குரலைக் கேட்டிடப்பா
அழகுமிகு கேணியினை அருகு கொண்ட பிள்ளையாரே
வழிதவறா வாழ்வை நாம் வாழ வழி விட்டிடப்பா
மகிழ்வுடனே நாம் வாழ்ந்து நிம்மதியைப் பெற்றுவிட 
உன்கருணை தந்திடவேயெம் குரலைக் கேட்டிடப்பா
ஆடிமாதம் திருவிழா காணும் எங்கள் பிள்ளையாரே
ஆற்றலுடன் எழுச்சி பெற்று தலைநிமிர வாழ்த்திடப்பா
வெற்றி கொண்ட மனத்தினராய் நாமென்றும் நிலைத்துவிட
அரவணைப்பைக் கோருகின்ற எம்குரலைக் கேட்டிடப்பா
இயற்கை எழில் நிறைந்த வடமராட்சி உறைகின்ற பிள்ளையாரே
இன்பம் நிறை எதிர்காலம் தந்தருள வந்திடப்பா
உள்ளத்தில் உயரெண்ணம் என்றும் நிலைத்துவிட
தேரேறிப் பவனிவரும் பூவற்கரைப் பிள்ளையாரே மனநிறைவைத் தாவென்ற எம்குரலைக் கேட்டிடப்பா.
ஆக்கம்- த மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen