...
செய்திகள்

யாழ்ப்பாணம்- வண்ணை வைத்தீஸ்வரசுவாமி திருக்கோயில் 

அன்னை வாலாம்பிகையுடன் உறையும் சிவனே 
அன்பின் திருவுருவாய் அமர்ந்திருக்கும் பேரருளே 
உன்னடியில் சரணடைந்தோம் எமக்கு என்றும் நல்லருளை வழங்கி வாழவைப்பாய் வைதீஸ்வரப் பெருமானே 
யாழ்ப்பாண மாநகரின் மத்தியிலே கோயில் கொண்ட சிவனே 
முத்ததமிழின் காவலனாய்த் திகழுகின்ற பேரருளே 
உன்னருளை நாடுகின்ற எமக்கு என்றும் 
துணையிருந்து வாழவைப்பாய் வைதீஸ்வரப் பெருமானே 
பெருமைமிகு யாழ் மண்ணை ஆளுகின்ற சிவனே 
பொல்லாதார் சகவாசம் தடுத்திடுவாய் பேரருளே 
வஞ்சமனங் கொண்டோர் செய்கருமம் தடுத்து எமக்கு என்றும் 
மனவமைதி தந்தெம்மை வாழவைப்பாய் வைதீஸ்வரப் பெருமானே
ஆறுகால பூசைகாணும் ஐயனே சிவனே 
ஆறுதலாய் வாழ்வதற்கு ஏற்ற வழிதந்திடுவாய் பேரருளே 
நிம்மதியாய், நிரந்தரமாய் வாழ்வதற்கு எமக்கு என்றும் 
உடனிருந்து வலுதந்தெம்மை
வாழவைப்பாய் வைதீஸ்வரப் பெருமானே 
ஆண்டிலிரு திருவிழாக்கள் காணுகின்ற சிவனே 
யாழ் மண்ணின் பெருமையினை மிளிரச் செய்வாய் பேரருளே 
பயங்கள் தரும் துன்பங்களை இல்லாது ஒழித்து எமக்கு என்றும் 
அரண்தந்தெம்மை வாழவைப்பாய் வைதீஸ்வரப் பெருமானே 
பஞ்சமா பூதங்களை அசைத்தாட்டுகின்ற சிவனே 
வஞ்சமில்லா மனமெமக்குத் தந்திடுவாய் பேரருளே 
சொந்த மண்ணில் நிம்மதியாய் வாழ்வதற்கு எமக்கு என்றும் காவல் தந்தெம்மை வாழவைப்பாய் வைதீஸ்வரப் பெருமானே. 
ஆக்கம்- த மனோகரன். 
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.P

Related Articles

Back to top button


Thubinail image
Screen