ஆன்மீகம்

யாழ்.தெல்லிப்பளை – அருள்மிகு துர்க்காதேவி திருக்கோயில்

வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம் தெல்லிப்பளை – அருள்மிகு துர்க்காதேவி திருக்கோயில்

அருள் மழை பொழிந்திடுவாள்
நிம்மதியைத் தந்து மன அமைதியையும் தந்திடுவாள்
அண்டிவந்து அடிபணிவோர்க்கு ஆறுதலும் அளித்திடுவாள்
தெல்லிப்பளை இருந்தருளும் அன்னை துர்க்காதேவியைத் தொழுவோம்

வேதனை போக்கிடுவாள் வெற்றிகள் தந்திடுவாள்
கேட்ட வரமளித்து கோலோச்சச் செய்திடுவாள்
நம்பி வரும் பக்தர்களின் நலனையும் உறுதிசெய்வாள்
தெல்லிப்பளை இருந்தருளும் அன்னை துர்க்காதேவியைத் தொழுவோம்

கொடுபகை துடைத்தெறிவாள் ஆற்றலைத் தந்திடுவாள்
தொல்லைகள் போக்கியென்றும் துணையாயிருந்திடுவாள் வல்லமை தந்தெம்மை வளமுடன் வாழச் செய்வாள்
தெல்லிப்பளை இருந்தருளும் அன்னை துர்க்காதேவியைத் தொழுவோம்

பொறுமையைப் பேணச் செய்வாள் பெருமையைத் தந்திடுவாள்
அச்சம் அகற்றிடுவாள் அணைத்துக் காத்திடுவாள்
உறவுகள் பேணச் செய்வாள் இணைய வழியும் செய்வாள்
தெல்லிப்பளை இருந்தருளும் அன்னை துர்க்காதேவியைத் தொழுவோம்

தடைகள் தகர்த்தெறிவாள் நேர்வழி வாழச் செய்வாள்
திறமைகள் வளர்த்திடுவாள் தீமைகள் புதைத்திடுவாள்
நேர்மையைப் போற்றிடுவாள் நிமிர்ந்து வாழச் செய்வாள்
தெல்லிப்பளை இருந்தருளும் அன்னை துர்க்காதேவியைத் தொழுவோம்

தரணியெங்கும் தமிழ் மக்கள் தலைநிமிர்ந்து வாழச்செய்வாள்
தன்மானம் குன்றாமல் என்றுமே விளங்கச் செய்வாள்
எழுச்சியுடன் வாழ ஏற்றவை தந்தருள்வாள்
தெல்லிப்பளை இருந்தருளும் அன்னை துர்க்காதேவியைத் தொழுவோம்.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button