செய்திகள்
யாழ் – தொண்டைமானாறு சின்னக்கடற்கரைக்கு குளிக்க சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு ..

யாழ் – தொண்டைமானாறு சின்னக்கடற்கரைக்கு குளிக்க சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உடுப்பிட்டியிலிருந்து தனது நண்பர்களுடன் கடலுக்கு நீராட சென்ற 17 வயதான இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் 09 பேருடன் இன்று மாலை குளிக்க சென்ற நிலையில் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
இதன்பின்னர் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் சுமார் 03 மணித்தியாலங்களின் பின்னர் குறித்த இளைஞன் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதே அவர் உயிரிழந்திருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சடலம் வல்வெட்டித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.