செய்திகள்

யாழ்.நாவற்குழியில் கொரோனா இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம் திறந்து வைப்பு

யாழ்.நாவற்குழியில் கொரோனா இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.

தற்போது யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றாளர்களை பராமரிப்பதற்காக 200 கட்டிகளுடன் தயார்படுத்தப்பட்டுள்ள குறித்த இடைத்தங்கல் பராமரிப்பு நிலையமானது, யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மற்றும் அரச அதிபரினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட செயலகத்திற்கு சொந்தமான நெல் களஞ்சியத்திலேயே குறித்த இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button