அரசியல்
யாழ். பல்கலைக்கழகத்தின் 4வது சர்வதேச ஆராய்ச்சி மாநாடு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 4வது சர்வதேச ஆராய்ச்சி மாநாடு இடம்பெற்றுள்ளது.
குறித்த மாநாடு நேற்று யாழ்ப்பாணம் மருத்துவ பீட கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, இராஜாங்க அமைச்சர் மற்றும் முதலமைச்சர் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விசேட உரையாற்றியுள்ளதுடன், அவர்களுக்கு பல்கலைக்கழக சமூகத்தினர் நினைவுப் பரிசு வழங்கி கௌவரவித்துள்ளனர்.
மேலும், இந்த நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் ராமநாதன்,நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன்,மாவை சேனாதிராஜா, வட மாகாண கல்வி அமைச்சர் க. சர்வேஸ்வரன் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.