...
செய்திகள்

யாழ் பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்ட மாணவனுக்கு கிடைத்த தண்டனை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவன் ஒருவர், புதுமுக மாணவர்கள் மீது பகிடிவதையில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் முடியும் வரை குறித்த மாணவன் பல்கலைக்கழகத்தின் எந்தவொரு பகுதிக்கும் உள் நுழைய முடியாதபடி தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேவேளை குறித்த மாணவனை உடனடியாக விடுதியிலிருந்தும் வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட மாணவன் ஒருவர் மீதே விஞ்ஞான பீட  பீடாதிபதியினால்  இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று (05) அதிகாலை 2.00 மணியளவில், புதுமுக மாணவர்களைப் பகிடிவதைக்கு உள்ளாக்கியதுடன் மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்தியதாகவும் குறித்த சிரேஷ்ட மாணவன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள், மாணவர் நலச்சேவை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் முடியும் வரை குறித்த மாணவன் உள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று விஞ்ஞான பீட பீடாதிபதியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen