செய்திகள்

யாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மீண்டும் திறப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மீளமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மீண்டும் அதே இடத்தில் இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி இரவு பல்கலைக்கழக நிர்வாகத்தினால் தகர்த்தப்பட்டது.

இதையடுத்து மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் அரசியல் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டதோடு, பல்கலைக்கழக மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மாணவர்களின் கடும் அழுத்தத்தையடுத்து மீண்டும் நினைவுத் தூபியை அதே இடத்தில் அமைப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் இணங்கியது. இதனையடுத்து கடந்த ஜனவரி 11ஆம் திகதி நினைவு தூபிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிலையில் நிர்மாணப்பணிகள் நிறைவுக்கு வந்ததையடுத்து இன்றைய தினம் நினைவுத் தூபி திறந்து வைக்கப்பட்டது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com