சமூகம்

அரச பேருந்து சேவையாளர்கள் கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பில் ..

அரச பேருந்து சேவையாளர்கள்,கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் இன்று (28/07) ஈடுபட்டனர்.

தனியார் பேருந்து சேவையினருடனான முரண்பாடு காரணமாக கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக பேருந்துகளை நிறுத்தி குறித்த கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.


முழங்காவில் பகுதிக்கான சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்து சேவையினருக்கு இடையில் 3 நாட்களாக முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றைய தினம் முழங்காவில் பகுதிக்கான அரச பேருந்து சேவையை இடைநிறுத்தி கவனயீர்ப்பு ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்படாத விடத்து, எதிர்வரும் 4ம் திகதிக்கு பின்னர் கிளிநொச்சி சாலையிலிருந்து வேவைகளை இடைநிறுத்தி தொடர் பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்படும் என ஊழியர்கள் குறிப்பிடுகின்றனர்.


60க்கு 40 என்ற இணைந்த பேருந்து சேவைக்கு மேலதிகமாக தனியார் பேருந்து சேவை இடம்பெறுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில் அக்கராயன், ஜெயபுரம் ஊடாக முழங்காவில் பகுதிக்கான சேவைகளை மக்கள் பெற்றுக்கொள்வதில் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button