செய்திகள்

யாழ். பாடசாலை ஆசிரியர்களுக்கு இன்று தடுப்பூசி ; கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நாளை

யாழ். மாவட்டத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி இன்று (09) வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படும் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

18 வயதிற்கு மேற்பட்ட ஆபத்துநிலை உடைய கர்ப்பிணித் தாய்மார்கள், 35 வயதிற்கு மேற்பட்ட அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், முன் களப் பணியாளர்களாக உள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் அவர்களுடைய சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் நாளை 10ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணிமுதல் தடுப்பூசிகள் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

யாழ். மாவட்டத்தில் கொவிட்-19 தடுப்பூசியேற்றும் திட்டத்தில் 2ஆம் கட்டத்தில் முதலாவது டோஸ் . கடந்த ஜூலை மாதம் 5ஆம் திகதி திங்கட்கிழமை முதல் வழங்கப்பட்டுவருகிறது.

தடுப்பூசி அல்லது வேறுமருந்துகளிற்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு யாழ். போதனா வைத்தியசாலையிலும், தெல்லிப்பழை, பருத்தித்துறை, சாவகச்சேரி மற்றம் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைகளிலும் நாளை சனிக்கிழமை காலை 8.00 மணிமுதல் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

Related Articles

Back to top button