செய்திகள்

யாழ். மக்களுக்கும் 2வது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று ; கொவிஷீல்ட் கொழும்பிற்கு..!

கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 70 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கான கொவிஷீல்ட் இரண்டாவது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகின்றது.

10,500 பேருக்கு இன்று கொவிஷீல்ட் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்தார். தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வருகை தருவோர், தமது தேசிய அடையாள அட்டை மற்றும் முதலாவது தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கான அட்டை என்பவற்றை கொண்டுவர வேண்டுமெனவும் அவர் கூறினார்.

இதேவேளை, யாழ் மாவட்ட மக்களுக்கான இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளும் இன்று முதல் ஆரம்பமாகின்றன. ஏற்கனவே தடுப்பூசி ஏற்றப்பட்ட மத்திய நிலையங்களில், இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

Related Articles

Back to top button