செய்திகள்

யாழ்.மாநகர சபைக்கு புதிய மேயர்.

யாழ். மாநகர சபையின் புதிய மேயராக சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவு
செய்யப்பட்டுள்ளார்.

யாழ். மாநகர சபையின் மேயரை தெரிவுசெய்யும் விசேட அமர்வு வட மாகாண உள்ளூராட்சி
ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதன்போதே சட்டத்தரணி மணிவண்ணன் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேயர் வேட்பாளர்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் முன்னாள் முதல்வர்
இமானுவேல் ஆர்னல்ட் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் சட்டத்தரணி
வி. மணிவண்ணன் ஆகியோரும் முன்மொழியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வாக்கெடுப்பில் இமானுவேல் ஆர்னல்ட்டுக்கு 20 வாக்குகளும் வி. மணிவண்ணனுக்கு 21
வாக்குகளும் கிடைத்துள்ளன.

கடந்த 16 ஆம் திகதி யாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது
தடவையாகவும் சமர்ப்பிக்ப்பட்டு தோற்கடிக்கப்பட்டதால் மாநகர முதல்வர் இ.
ஆர்னல்ட் தனது பதவியை இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button