...
செய்திகள்

யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று (9) விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார்.யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல பிரதேசங்களில் கடந்த சில மணித்தியாலங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் திருநெல்வேலி வானிலை அவதான நிலையம் அறிக்கையிட்டுள்ளது.

இதன்காரணமாக மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதனைக் கருத்திற்கொண்டு யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காண ஆளுனருடன் ஆலோசித்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மன்னார் மாவட்டத்தில், சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஸ்டேன்லி டிமெல் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen