செய்திகள்

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கொவிட் தொற்று..

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நோய் அறிகுறிகள் தென்பட்ட காரணத்தால் தனது மனைவி மற்றும் மகளுடன் கொவிட் பரிசோதனை செய்துக் கொண்ட போது தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக கடந்த தினங்களில் தான் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன் நெருங்கிப் பழகிய அனைவரும் சுய தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen