செய்திகள்

யாழ் மேல் நீதிமன்றத்தால் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான கஞ்சா எரிப்பு.

யாழ் மேல் நீதிமன்றத்தால் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான கஞ்சா எரிப்பு.

சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா இன்று எரித்து அழிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய சுமார் ஆயிரம் கிலோகிராம் கேரள கஞ்சா எரித்து அழிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கரின் முன்னிலையில் நீதிமன்ற வளாகத்துக்கு அண்மையாகவுள்ள வெற்றுக் காணியில் இவை எரித்தழிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் கடந்த ஒரு வருடத்துக்குள் முன்னெடுக்கப்பட்ட 20 வழக்குகளின் சான்று பொருளாக காணப்பட்ட கேரள கஞ்சாவே எரித்தழிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று வருடங்களில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் இரண்டாயிரத்து 500 கிலோ
கிராமுக்கும் அதிகமான கேரள கஞ்சா எரித்து அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button