...
செய்திகள்

யாழ். வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் வைத்தியசாலையில்!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்கு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அராலி மத்தியில் வசிக்கும் நபர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் பேருந்தில் செல்லும்போது அரச மரத்துடன் குறித்த பேருந்து மோதியுள்ளது.

இதில் அறுவர் பயணித்த நிலையில் ஒருவர் படுகாயமடைந்ததுடன் மற்றைய இருவர் சாதாரண காயங்களுக்கு உள்ளாகினர்.

காயமடைந்த மூவரும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்தானது வேகக்கட்டுப்பாட்டினை இழந்தமையே விபத்திற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen