செய்திகள்
“யுத்தத்தின் கொடூரத்தை நினைவுக்கூறுவோம் நிகழ்வு நீர்கொழும்பில்
கடந்த 18ம் திகதி யுத்தத்தில் உயிர் நீத்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில் மக்கள்உரிமையை பாதுகாக்கும் அமைப்பு நேற்று ஏற்பாடு செய்த “யுத்தத்தின் கொடூரத்தை நினைவுக்கூறுவோம்”எனும் தொனிப்பொருளில் இறுதி யுத்தத்தின் போது மரணித்த சொந்தங்களுக்கு தீபம் ஏற்றி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.இந்த நிகழ்வு நேற்று நீர்கொழும்பில் 03 மணிக்கு இடம்பெற்றது. இதன் போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய நிலையையும் துண்டுபிரசுரம் மூலம் இரு மொழிகளிலும் பிரசுரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் மொழி,மதம் கடந்து அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டது சிறப்பம்சமாகும்.