செய்திகள்

யுத்த காலத்தில் அகதியாக தமிழகம் சென்ற 27 பேர் நாடு திரும்பினர்.

கடந்த யுத்த காலப்பகுதியில் மன்னார் பிரதேசத்தில் இருந்து கடல் மார்க்கமாக இந்தியா, தமிழ்நாடு நோக்கி இடம்பெயர்ந்த இந்நாட்டு அகதிகள் சிலர் மீண்டும் தாயகம் திரும்பியுள்ளனர். 

சிறைச்சாலைகள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு, ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இணைந்து அவர்களை மீள இந்நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

இதன்படி இவர்கள்  கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

27 பேர் கொண்ட இந்த குழுவில் 11 பெண்களும் 10 ஆண்களும் மற்றும் 6 குழந்தைகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. 
இவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் திருக்கோணமலை பிரதேசங்களை வசிப்பிடமாக கொண்டவர்களாவர். 

Related Articles

Back to top button