சினிமா

யுவன்சங்கர் ராஜாவின் சொகுசு கார் திருட்டு

பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் ரூ.60 லட்சம் மதிப்புள்ள சொகுசு காருடன் மாயமான டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா தனது மனைவியுடன் எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அவருக்கு கார் டிரைவராக நவாஸ் கான் சாதிக்(34) என்பவர் சில மாதங்களாக வேலை செய்து வந்தார். யுவன்சங்கர் ராஜா திரைப்படம் தொடர்பாக தற்போது மதுரையில் உள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கமாக கார் டிரைவர் நவாஸ் கான் சாதிக் பணிக்கு வந்தார். பின்னர் ரூ.60 லட்சம் மதிப்புள்ள ஆடி கரை சுத்தம் செய்துள்ளார். வழக்கமாக நேற்று மாலை பணி முடிந்த டிரைவர் நவாஸ் கான் சாதிக், காரை வீட்டில் விடாமல், காருடன் மாயமாகிவிட்டார்.
யுவன் சங்கர் ராஜாவின் மனைவி வெளியில் செல்ல காரை எடுக்க வந்தார். அப்போது வீட்டில் கார் இல்லை.

இதனால் கார் டிரைவர் நவாஸ் கான் சாதிக்கை அவர் தொடர்பு கொண்டார். ஆனால் அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. பல வழிகளில் கார் டிரைவரை தொடர்பு கொண்டும் முடியவில்லை. பின்னர் இதுகுறித்து தனது கணவர் யுவன் சங்கர் ராஜாவுக்கு தெரிவித்தார். அதன்படி யுவன் சங்கர் ராஜாவின் நண்பர் ராஜராஜன் நள்ளிரவு 1.40 மணிக்கு எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சொகுசு காருடன் தலைமறைவான கார் டிரைவர் நவாஸ் கான் சாதிக்கை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் எழும்பூரில் பரபரப்பு ஏற்பட்டது.

நன்றி .சினிமா தினகரன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button