செய்திகள்பதுளைமலையகம்

யூரி தோட்ட மாப்பாகல தோட்ட தொழிலாளி மலையில் வழுக்கி விழுந்து உயிரிழப்பு..

யூரி தோட்ட மாப்பாகல பிரிவைச் சேர்ந்த தொழிலாளி
லெட்சுமணன் ராஜேந்திரன் (56 வயது) நேற்று (06/02) சனிக்கிழமை தேயிலை மலையில் வழுக்கி
விழுந்து பரிதாபமாக
பலியாகியுள்ளார்.

இவர் திருமணம் முடித்த
மூன்று பிள்ளைகளின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நேற்று (06)வேலைக்கு சென்று வேலை முடித்து வீட்டுக்கு வராத காரணத்தால் உறவினர்கள் தேடிச் சென்ற போதே தேயிலை மலைப்பகுதியில் சடலமாக காணப்பட்டார்.
பின்னர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்பட்டது.
வெளிவாரி மலையில் அமரத்தப்பட்ட தொழிலாளி தொடர்பில் உரிய தரப்பினர் கரிசனைக்காட்ட வேண்டுமென்பதே இத்தோட்ட மக்களினது எதிர்ப்பார்ப்பாகும்.

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Back to top button