விளையாட்டு

யோக்கர் மன்னன் வெற்றியுடன் விடைபெற்றார் ..

இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகள் மோதிய முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி நேற்று பகல் இரவு போட்டியாக கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பாமனது .

அதன்படி நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியானது முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 314 ஓட்டங்களை குவித்தது.

இலங்கை அணிசார்பில் குஷல் ஜனித் பெரேரா சத்தம் கடந்தார்.

315 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பங்களாதேஷ் அணி 41.4 ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 223 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 91 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.

பங்களாதேஷ் அணி சார்பில் சபீர் ரஹ்மான் 60 ஓட்டத்துடங்களையும்,முஷ்தாபிகுர் ரஹும் 67 ஓட்டத்துடங்களையும்,அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

நேற்றைய தினம் தனது ஒருநாள் சர்வதேச போட்டியின் இறுதி போட்டியில் விளையாடிய மாலிங்க தனது முதல் போட்டி எப்படியோ அப்டியே நேற்றைய தினமுமும் ஒரு கலக்கு கலக்கி இருந்தார்.மிகவும் சிறப்பாக பந்து வீச்சி பிங்களதேஸ் அணியை நிலை குலைய செய்த அவர் 03 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

மேலும் அணி சார்பில் நுவான் பிரதீப் 3 விக்கெட்டுக்களையும்,தனஞ்சய டிசில்வா 2 விக்கெட்டுக்களையும், லஹிரு திரிமான்ன ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தி இலங்கை அணியை வெற்றிப்பாதைக்கு இட்டு சென்றனர்.

தனது இறுதி போட்டியில் வெற்றியுடன் லசித் மாலிங்க சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து விடைபெற்றுச் சென்றார்.

Related Articles

Back to top button