சினிமாசெய்திகள்

“ரசிகர்களிடம் கார்த்தி கோரும் அன்புப் பரிசு!!”.. பரபரப்பு அறிக்கை..

நடிகர் கார்த்தி தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு தன் ரசிகர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கார்த்தி, இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இந்த பிறந்த நாளை முன்னிட்டு தமது ரசிகர்களுக்கு கார்த்தி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கார்த்தி கூறியிருப்பதாவது, “அன்புத் தம்பிகள் அனைவருக்கும் வணக்கம்! இந்த கொரோனா சூழல் இதுவரை நாம் கண்டிராத அளவுக்கு மிகக் கடுமையாக உள்ளது! அரசாங்கமும், மருத்துவர்களும் நமக்கு அறிவித்துள்ள, ‘மாஸ்க் அணிதல், சானிடைசர் பயன்படுத்தல், தனி மனித இடைவெளியைக் கடைபிடித்தல், வசிப்பிடத்தை விட்டு வெளியே செல்லாமல் இருத்தல் போன்ற பாதுகாப்பு விதிமுறைகளை தவறாமல் பின்பற்றி; தம்பிகள் ஒவ்வொருவரும் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்’. இதுவே இந்தப் பிறந்தநாளுக்கு எனக்கு நீங்கள் தரும் பரிசாக இருக்கும்!” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் பயின்ற கார்த்தி, இயக்குநராகும் ஆசையில் மணிரத்னத்திடம் உதவியாளராக சேர்ந்து, பின்னர் அமீரின் இயக்கத்தில் பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார். கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியாகி வெற்றி பெற்ற படம் சுல்தான். இயக்குநர் மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வனில் கார்த்தி நடித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகர் கார்த்திக்கிற்கு malayagam.lk இன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com