செய்திகள்
ரஜரட்ட பல்கலைக்கழகத்துக்கு பூட்டு

ரஜரட்ட பல்கலைக்கழகத்தை, இன்று தொடக்கம் எதிர்வரும் செம்டம்பர் மாதம் 3 ஆம் திகதி மூடுவதற்கு பல்கலைகழக அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீர் பற்றாக்குறை காரணமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பல்கலைக்கழக மாணவர்களிடையே அம்மை நோய் பரவி வந்ததன் காரணமாக, கடந்த ஓகஸ்ட் மாதம் 10 திகதி, பல்கலைக்கழகம் மூடப்பட்டு நேற்றைய தினம் திறக்கப்படவிருந்தது, எனினும் தற்போது அநுராதபுரம் மாவட்டத்தில் நிலவி வரும் வரட்சியின் காரணமாக, மாணவர்களுக்கு தேவையான நீரை வழங்க முடியாதுள்ளமையால், பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களையும் மூட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.