அரசியல்

ரஞ்சனுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம்.

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களான எல்.ரி பீ தெஹிதெனிய,முர்து பெர்ணான்டோ ஆகியோர் முன்னிலையில் இந்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ரஞ்ஜன் ராமநாயக்க வேண்டுமென்றே நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் உரையாற்றவில்லை என அவர்

சார்பில் மன்றில் ஆஜராகிய சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.இந்த வழக்கை டிசம்பர் மாதம் இரண்டாம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button