அரசியல்செய்திகள்

ரணிலின் தலைமையின் கீழ் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ?

ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி களமிறங்கும் என கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவிக்கின்றார்.

கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் வெற்றிபெறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்து ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அகில விராஜ் காரியவசம் கூறியுள்ளார்.

எதிர்கட்சி தலைவராக பரிந்துரைக்கப்பட்டுள்ளவருடன் கட்சித் தலைவர் இணைந்து இந்த விடயங்கள் குறித்து செயற்படுவார் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Back to top button