அரசியல்செய்திகள்

ரணிலும் – சஜித்தும் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திப்பார்கள்..

2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றிப்பெற செய்வதே எமது ஒரே நோக்கம் என நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் , சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நடைப்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் வினவப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்வரும் தேர்தலில் வெற்றிப்பெறகூடிய வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது இந்த தொடர்பில் இதன்போது இருவரும் கலந்துரையாடியதாகவும் அவர் கூறினார். 

இதேவேளை, ரணிலும் – சஜித்தும் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திப்பார்கள் எனவும் காவிந்த ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்

Related Articles

Back to top button