அரசியல்செய்திகள்

ரணில் ஒரு போதும் சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க போவதில்லை

ரணில் விக்ரமசிங்க ஒரு போதும் சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க போவதில்லை என ஊவா மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார். 

பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார். 

சஜித் பிரேமதாச ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் பதவியை போராடி பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை அல்லது பிரதமர் பதவியை பெற்றுக்கொள்வதே ஒரே நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டார். 

ரணில் விக்ரமசிங்க தனி நபர் ஒருவருக்கு வேட்பாளர் பதவி வழங்க மாட்டார் எனவும் அவர் மேலும் கூறினார்.

Related Articles

Back to top button
image download