செய்திகள்

ரணில்- சஜித் இணைந்து இருப்பதே கட்சிக்கு பலம்.

ஐக்கிய தேசியக் கட்சியை பலமிக்கதொரு சக்தியாக மாற்றுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அமைச்சர் சஜித் பிரேமதாசவும் இணைந்து செயற்பட வேண்டுமென அமைச்சர் காமினி ஜெயவிக்ரம தெரிவித்துள்ளார்.

இன்று காலை அலரிமாளிகையில் நடைபெற்ற ஐஐக்கிய தேசியக்கட்சியின் ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தேர்தலை எவ்வாறு வெற்றிகொள்வது என்பது குறித்து பிரதமர் மிகவும் அழகாக விபரித்துள்ளாதாகவும் , தேர்தலை வெற்றிக்கொண்டு கட்சியை முதலில் பாதுகாக்க வேண்டும் எனவும் கட்சியில் எடுக்கப்படும் தீர்மானத்துக்கமைய அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு செயற்படும் பட்சத்தில் கோட்டாவை மட்டுமல்ல வேறு எந்த படையினர் போட்டியிட்டாலும் அவர்களை வெற்றிக்கொண்டு முன்நோக்கி செல்லக்கூடிய சக்தி கட்சிக்கு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக்கட்சிக்குள் பிரதமர், சஜித், கரு ஜெயசூரிய என மூன்று ஜனாதிபதி வேட்பாளர்கள் உள்ளதாகவும் , இந்த மூவருடன் முதலில் கலந்துரையாடி அதனடிப்படையில் ஜனாதிபதி வேட்பாளரை நேரடியாகவே அறிவிப்போம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
image download