செய்திகள்

ரணில் விக்கிரமசிங்க இவ்வார அமர்வில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் ! .

பாராளுமன்ற கட்சித்தலைவர்களின் கூட்டம் இன்று காலை ஒன்பது மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமானது. எதிர்வரும் நாட்களில் பாராளுமன்ற அமர்வை நடத்துவது தொடர்பில் தீர்மானிப்பதற்காக கட்சித்தலைவர்களின் கூட்டம் இடம்பெறவுள்ளதாக படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்தார்.

அடுத்த வாரத்தில் இரண்டு நாட்களுக்கு மாத்திரம் பாராளுமன்ற அமர்வை முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்தாலும் அது தொடர்பில் கட்சித்தலைவர்களின் இணக்கம் பெறப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார். இதேவேளை பாராளுமன்ற உறுப்பினராக வர்த்தமானியில் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வார அமர்வில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமானம் செய்யவுள்ளதாக படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ குறிப்பிட்டார்.

Related Articles

Back to top button