அரசியல்
ரணில் விக்ரமசிங்கவிற்கும் கோத்தபாய ராஜபக்சவிற்கும் இடையில் சந்திப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கைக்கமைய இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமரான ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையில் இருந்து வெளியேறும் போது அவருக்கான முழுமையான பாதுகாப்பு தொடர்பிலே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.