அரசியல்

ரணில் விக்ரமசிங்கவிற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு உள்ளதென தெரிவித்து கொண்டுவரப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரேரணைக்கு ஆதரவாக ஐக்கிய தேசிய முன்னணியுடன் சேர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வாக்களித்துள்ளது.

இதனடிப்படையில், பிரேரணைக்கு ஆதரவாக 117 வாக்குகள் அளிக்கப்பட்டன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகாத நிலையில், இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

இதேவேளை நாடாளுமன்றம் மீண்டும் 18 ஆம் திகதி நண்பகல் 1 மணிக்கு கூடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

34 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button