செய்திகள்
ரயிலில் மோதி மாணவி பலி
அம்பலாங்கொடை பகுதியில் ரயிலில் மோதி பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அம்பலாங்கொடை நகரில் உள்ள தனியார் வகுப்பொன்றில் இருந்து இடைவேளை வழங்கப்பட்ட போது உணவருந்துவதற்காக ரயில் பாதை ஊடாக நடந்து சென்ற போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அளுத்கமையில் இருந்து காலி நோக்கி பயணிக்கும் ரயிலிலேயே குறித்த மாணவி மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்பலாங்கொடை, தொபன்வில பகுதியை சேர்ந்த 18 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.