செய்திகள்

ரயில்வே தொழிற்சங்கம் எச்சரிக்கை.!

எமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் தற்போது சேவையில் ஈடுபடும் 8 ரயில் சேவைகளும் நாளை முதல் நிறுத்தப்படும் என்று ரயில்வே தொழிற்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிலாபம், கண்டி, அனுராதபுரம், மஹாவ, ரம்புகணை, காலி, மாத்தறை மற்றும் அவிசாவளை ஆகிய இடங்களுக்கு காலை, மாலை என 8 அலுவலக ரயில் சேவைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறான நிலையில் எமது கோரிக்கைக்குத் தீர்வு கிடைக்காவிடின் நாளையிலிருந்து அந்த 8 ரயில் சேவையும் இடைநிறுத்தப்படும் என்று ரயில்Nவு இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடாங்கொட தெரிவித்துள்ளார்.

இதேவேளை சகல ரயில் நிலையங்களுக்கும் பாதுகாப்பு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button