செய்திகள்

ரயில்வே நிலங்களில் பயிர்ச்செய்கை மேற்கொள்ள நடவடிக்கை!

இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமாக ஒதுக்கப்பட்ட காணிகளின் மொத்த பரப்பளவு கிட்டத்தட்ட 14,000 ஏக்கர் ஆகும். இதில் சுமார் 10% பல்வேறு நோக்கங்களுக்காக குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
ரயில்வே திணைக்களத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு உடனடியாக தேவைப்படாத பயிர்ச்செய்கைக்கு ஏற்ற வகையில் புகையிரத மார்க்கங்கள் மற்றும் புகையிரத நிலையங்களை ஒட்டியுள்ள காணிகளை தற்காலிகமாக குத்தகைக்கு விடுவது பொருத்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த பிரதேசங்களில் ஏற்கனவே பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், புகையிரத மார்க்கங்களுக்கு அருகில் வசிப்பவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து, 1 வருட காலப்பகுதிக்கு விவசாய நடைமுறைகளுக்கும் குத்தகை அடிப்படையில் பயன்படுத்துவதற்கும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Articles

Back to top button